ஊராட்சி அமைப்புகளில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழகத்துக்கு 12 தேசிய விருது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்

தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌, மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின்‌ சிறந்த முயற்சிகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ மத்திய அரசின்‌ 12 தேசிய விருதுகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌, மாண்புமிகு மத்திய வேளாண்மை, விவசாயிகள்‌ நலன்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ பஞ்சாயத்து ரால்‌ துறை அமைச்சர்‌ நரேந்திர சிங்‌ தோமர்‌ அவர்களிடம்‌ புதுடெல்லியில்‌ பெற்றுக்‌ கொண்டார்.

தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌, மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின்‌ சிறந்த முயற்சிகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ மத்திய அரசின்‌ 12 தேசிய விருதுகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌, மாண்புமிகு மத்திய வேளாண்மை, விவசாயிகள்‌ நலன்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ பஞ்சாயத்து ரால்‌ துறை அமைச்சர்‌ நரேந்திர சிங்‌ தோமர்‌ அவர்களிடம்‌ புதுடெல்லியில்‌ பெற்றுக்‌ கொண்டார்.

மத்திய அரசின்‌ சார்பில்‌, மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின்‌ சிறந்த முயற்சிகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, ஊராட்சிகளில்‌ தகவல்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்‌ நுட்ப முறைகளை (Information and Communication Technology 1005) திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில்‌ தமிழகம்‌ முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின்‌ e-Panchayat Puraskar விருதும், அதேபோல, ஊராட்சிகளுக்கு கூடுதல்‌ அதிகாரங்கள்‌, கூடுதல்‌ நிதி மற்றும்‌ பணியாளர்களை அளித்து ஊராட்சிகளின்‌ திறனை மேம்படுத்திய வகையில்‌, மாவட்ட அளவில்‌ சேலம்‌ மாவட்டத்திற்கும்‌, ஒன்றிய அளவில்‌ ஈரோடு மாவட்டம்‌ - பெருந்துறை மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டம்‌ - பள்ளிப்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியங்களுக்கும்‌, ஊராட்சிகள்‌ அளவில், 1. சேலம்‌ மாவட்டம்‌ - கோனூர்‌ கிராம ஊராட்சி, 2. கோவை மாவட்டம்‌ - மத்வராயபுரம்‌ கிராம ஊராட்சி, 3. நாமக்கல்‌ மாவட்டம்‌ - அரசபாளையம்‌ கிராம ஊராட்சி, 4. ஈரோடு மாவட்டம்‌ - வெள்ளாள பாளையம்‌ கிராம ஊராட்சி, 5. மதுரை மாவட்டம்‌ - கோவில்பாப்பாக்குடி கிராம ஊராட்சி, 6. திருவண்ணாமலை மாவட்டம்‌ - 5.பூ வனம்‌ கிராம ஊராட்சி ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கு தீன்‌ தயாள்‌ உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும்‌ விருதும்‌ (Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (DDUPSP), திருப்பூர்‌ மாவட்டம்‌, ராவணப்புரம்‌ கிராம ஊராட்சிக்கு வலுவான கிராம சபையின்‌ மூலம்‌ சிறப்பான சாதனைகள்‌ புரிந்தமைக்கான நானாஜி தேஷ்முக்‌ ராஷ்டிரிய கெளரவ கிராம சபை தேசிய விருதும்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, பட்டீஸ்வரம்‌ கிராம ஊராட்சிக்கு குழந்தைகள்‌ நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது (Child Friendly Village Panchayat) stor Gurgssu 12 தேசிய விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையிலான அம்மாவின்‌ அரசின்‌ சார்பில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பெற்றுக்‌ கொண்டார்.

பின்னர்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ பேசும்பொழுது தெரிவித்ததாவது:

தமிழக அரசின்‌ ஊரக வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ கடந்த 8 ஆண்டுகளில்‌ (2011-2019 வரை) ரூ.17,199 கோடி மதிப்பீட்டில்‌ 78,190 கி.மீ சாலைப்‌ பணிகள்‌, ரூ.6,329 கோடி மதிப்பீட்டில்‌ 3.86 இலட்சம்‌ குடிநீர்‌ திட்டப்‌ பணிகள்‌, ரூ.875 கோடி மதிப்பீட்டில்‌ 20.87 இலட்சம்‌ தெரு விளக்குகள்‌, ரூ.807.63 கோடி மதிப்பீட்டில்‌ 543 பாலங்கள்‌, ரூ.654 கோடி மதிப்பீட்டில்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகள்‌, ஊரகப்‌ பகுதிகளில்‌ இதுவரையில்‌, 49.86 இலட்சம்‌ தனிநபர்‌ இல்லக்‌ கழிவறைகள்‌ அமைத்து சாதனை புரிந்துள்ளது. மேலும்‌, நகாப்புறம்‌ மற்றும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ இதுவரை 15.14 இலட்சம்‌ வீடுகள்‌ கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தினை செயல்படுத்துவதில்‌, தமிழகம்‌ அனைத்து மாநிலங்களுக்கும்‌ முன்னோடியாக திகழ்கிறது. அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளும்‌ திறந்தவெளியில்‌ மலம்‌ கழித்தல்‌ அற்ற ஊராட்சிகளாக மாற்றம்‌ அடைந்துள்ளன.

மேலும்‌, கடந்த 02.10.2019 அன்று பாரத அளவில்‌ ஊரக தூய்மைக்‌ கணக்கெடுப்பின்‌ அடிப்படையில்‌, தூய்மைப்‌ பணிகள்‌, தனிநபர்‌ இல்லக்‌ கழிவறைகள்‌ கட்டியது, அங்கன்வாடிகள்‌, பள்ளிகள்‌ தூய்மை பராமரிப்பு ஆகியவற்றில்‌ தமிழ்நாடு ஒட்டுமொத்த சிறந்த மாநிலமாகத்‌ தேர்வு செய்யப்பட்டு, பாரதப்‌ பிரதமர்‌ திரு.நரேந்திர மோடி அவர்களால்‌, தமிழகத்திற்கு மத்திய அரசின்‌ சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது மகாத்மா காந்தி அவர்களின்‌ பிறந்த தினத்தன்று குஜராத்தில்‌ வழங்கப்பட்டது. அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தினை தமிழ்நாட்டில்‌ மிகவும்‌ சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின்‌ 5 தேசிய விருதுகளும்‌, மத்திய அரசின்‌ கிராம ஸ்வராஜ்‌ அபியான்‌ இயக்கத்தின்‌ கீழ்‌, குறிப்பிட்ட 7
முக்கிய திட்டங்களில்‌ தன்னிறைவு எய்தி சிறப்பாக செயல்படுத்தியமைக்கான தேசிய விருதையும்‌ மத்திய அரசு கடந்த 11.09.2018ல்‌ அன்று வழங்கியுள்ளது.

தேசிய அளவில்‌ ஊரக வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, மத்திய அரசு 2012 முதல்‌ இதுவரையில்‌ 12 மாநில அளவிலான தேசிய விருதுகள்‌, 19 மாவட்ட அளவிலான தேசிய விருதுகள்‌, 12 ஊராட்சி ஒன்றிய அளவிலான தேசிய விருதுகள்‌, 43 கிராம ஊராட்சிகள்‌ அளவிலான தேசிய விருதுகள்‌ என மொத்தம்‌ 86 தேசிய விருதுகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. இதுபோன்று மத்திய அரசு தமிழக அரசின்‌ சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்குவது தமிழ்நாடு அரசுக்கு மேலும்‌ ஊக்கத்தை அளிக்கும்‌ என நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ ஹன்ஸ்ராஜ்‌ வாமா, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநா்‌ கே.எஸ்‌.பழனிசாமி உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...