தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு? டெங்குவை கட்டுப்படுத்த கோரிக்கை

கோவை : தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக அரசின் புள்ளி விவரப்படி சுமார் நான்காயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கோவை : தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக அரசின் புள்ளி விவரப்படி சுமார் நான்காயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஏராளமான நோயாளிகள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றனவா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.

அனைவருக்கும் டெங்கு பரிசோதனையை, அரசு மருத்துவமனைகளில் செய்யும் வசதிகள் இல்லாததால் மக்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்தப்பரிசோதனை நிலையங்களை நாட வேண்டியுள்ளது.

இந்நிலையில், தனியார் பரிசோதனை நிலையங்கள், டெங்கு காய்ச்சல் பரிசோதனைகளை செய்யக் கூடாது என அரசு அதிகாரிகள் மிரட்டிவருவதாகவும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசு அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இரத்த பரிசோதனை நிலையங்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் டெஸ்டை மட்டுமே செய்கின்றன. எனவே, தமிழக அரசு சிகிச்சை முறைக்கான புதியப் புரோட்டக்காலை (Treatment Protocol) உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதனை அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனை மையங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் இக்கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். கொசு ஒழிப்புப் பணியில் போதிய ஊழியர்களை ஈடுபடுத்துவதும் அவசியம்.

ஆனால், அரசு இந்த இரண்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டதாகவும் முறையான பயிற்சி பெற்ற ஊழியர்களை போதிய அளவில் அரசு நியமிக்க வில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததும், கொசு ஒழிப்புப் பணியை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காததால், மக்கள் திறந்த பாத்திரங்களில் தண்ணீரை நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பதே டெங்கு அதிக அளவில் பரவக் காரணம். எனவே, சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை மிரட்டும் போக்கை கைவிட்டு, டெங்குவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...