கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 37 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர்கள் என்.அண்ணாதுரை(வருவாய்), வி.சரவணன் (கணக்கு) ஆகியோர் இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மண்டல உதவி அணையர்கள் செந்தில்குமார்ரத்தினம், ம.செல்வன், மகேஷ்கனகராஜ், ஏ.ஜே.செந்தில்அரசன், தி.ரா.ரவி, மேற்கு மண்டல செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.