கோவை : கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை மீண்டும் இயக்க கோரி, ரயில்வே போராட்டக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கோவை பொள்ளாச்சி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் காரணமாகக் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் நிறைவடைந்து பொள்ளாச்சி இரயில் பாதையில் சேவை துவங்கிய நிலையில், தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் இயக்கப்பட வில்லை.
இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவைகளை மீண்டும் இயக்க கோரி போராட்டம் நடத்துவது தொடர்பாக கடந்த வாரம் ரயில்வே போராட்ட குழு கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக கையெழுத்து இயக்கம் நடத்துவது, அடுத்த கட்டமாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கோவை கோவை ரயில் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

மேலும், ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பயணிகளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது. இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், முதல்கட்டமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றுள்ளதாகவும், தங்களுடைய போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் அடுத்த கட்டமாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.