உயிர் காக்க உதவும் ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய சம்பவம் ; இருவர் கைது 500 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த நபர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்திய சம்பவத்தில் கோவை போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த நபர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்திய சம்பவத்தில் கோவை போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சமீபகாலமாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை திட்டமிட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கஞ்சா கடத்தல் கும்பல்கள் காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பல்வேறு முறைகளில் கஞ்சாவை கடத்தி வருகின்றனர்.

இப்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி ,அருண் மற்றும் அசோக் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உள்ள பாடகிரி மலைப்பகுதியில் இருந்து  கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தனர்.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே கோவை போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உடுமலைபேட்டை சங்கிலி நாடார் வீதியை சேர்ந்த மனோகரனின் மகன் அருண்குமார் TN 72 R 1976 என்ற எண் கொண்ட ஆம்புலன்சில் வந்துள்ளார்.

அப்போது அவரது வாகனத்தை வழி மறித்த போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் ஆம்புலன்சில் இருந்து 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அருண் குமாரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி வீட்டில் 250 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

அதனையும் பறிமுதல் செய்த கோவை போதை தடுப்பு பிரிவு போலிசார் தப்பியோடிய கருப்பு சாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

அதேபோல கடத்தி வரப்பட்ட கஞ்சா பொருட்கள் அனைத்தும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிர் காக்க உதவும் ஆம்புலன்சை எந்த தடையும் இன்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை பயன்படுத்தி சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...