இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களுக்கான தேசிய ஓய்வூதியத்‌ திட்டம்‌ குறித்த செயல்‌ விளக்கத்தினை கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை முதன்மைச்‌ ஆணையர்‌ வெளியிட்டார்

கோவை : இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களுக்கான தேசிய ஒய்வூதிய திட்டம்‌ (National Pension System) குறித்த செயல்‌ விளக்கத்தினை கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்‌ துறை முதன்மைச்செயலர்‌,/ ஆணையர்‌, தென்காசி சு.ஐவஹர்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ அளித்தார்‌.

கோவை : இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களுக்கான தேசிய ஒய்வூதிய திட்டம்‌ (National Pension System) குறித்த செயல்‌ விளக்கத்தினை கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்‌ துறை முதன்மைச்செயலர்‌,/ ஆணையர்‌, தென்காசி சு.ஐவஹர்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ அளித்தார்‌. 

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌, சுஜித்குமார்‌, கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர்‌, இரா.பூங்கோதை, கருவூல அலுவலர்‌ பி.வி.ராஜா மற்றும்‌ பலர்‌ கலந்துக்‌ கொண்டனர்‌. 

பின்னர்‌ கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்‌ துறை முதன்மைச்செயலர்‌/ஆணையர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌, பங்களிப்பு ஒய்வதியத்‌ திட்டம்‌(CPS) 01.04.2003க்குப்‌ பிறகு அரசுப்‌ பணியில்‌ சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ அரசுப்‌ பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட (அவர்களது அடிப்படை ஊதியம்‌, தர ஊதியம்‌, அகவிலைப்படி ஆகியவற்றை கணக்கில்‌ எடுத்துக்கொண்டு அவற்றின்‌ 10%) தொகையும்‌, அரசின்‌ பங்களிப்பு தொகையும்‌, அதன்‌ மீதான வட்டித்‌ தொகையும்‌ கணக்கிடப்பட்டு, அரசு ஊழியர்களின்‌ பங்களிப்பு ஒய்வதியத்‌ திட்டகணக்கில்‌ வரவு வைக்கப்படுகிறது. 

தற்பொழுது 30.09.2019 முடிய 5.48 இலட்சம்‌ பணியாளர்கள்‌ இத்திட்டத்தில்‌ இணைந்துள்ளனர்‌. இவர்களுக்கான கணக்குகள்‌ முதன்மைச்‌ செயலர்‌ மற்றும்‌ ஆணையர்‌, கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை அவர்கள்‌ தலைமையில்‌ இயங்கும்‌ நிதித்துறையின்‌ நிர்வாக கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ அரசுத்‌ தகவல்‌ தொகுப்பு விவர மையத்தால்‌ (Government Data Centre) பராமரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும்‌, 2003-04 முதல்‌ 2018-2019 முடிய கணக்குத்தாள்‌ www.cps.tn.gov.in/public மற்றும் wwwcps.tn.gov.in/lb_cps/public இணையதளத்தில்‌ அரசுத்‌ தகவல்‌ தொகுப்பு விவர மையத்தால்‌ வெளியிடப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஒய்வதிய திட்ட இறுதி தொகை விவரங்கள்‌அரசுத்‌ தகவல்‌ தொகுப்பு விவர மையத்தால்‌ முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பங்களிப்பு

ஒய்வதிய திட்டத்தின்‌ கீழ்‌ பணியிலிருந்து ஓய்வுபெற்ற” பணித்துறப்பு/ பணிநீக்கம்‌, பணியிலிருக்கும்‌ போது இறந்த 14,827 பணியாளர்களுக்கு இறுதி கணக்குதாள்‌ அரசுத்‌ தகவல்‌ தொகுப்பு விவர மையத்தால்‌ வழங்கப்பட்டுள்ளது. இதன்‌ அடிப்படையில்‌ கருவூலக்‌ கணக்குத்‌ துறையால்‌ 30.09.2019 வரை இறுதி

ஒப்பளிப்பு ஆணை (CPS Final Authorization) ரூ.707.66/-கோடி வழஙகப்பட்டுள்ளது.

மேலும்‌, 18,000 பணம்‌ பெற்று வழங்கும்‌ அலுவலர்களிடம்‌ இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள்‌ 20 தினங்களுக்குள்‌ வழங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும்‌ விரைவுபடுத்தி 10 தினங்களுக்குள்‌ வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசால்‌ ஒருங்கிணைந்த நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ திட்டம்‌ (IFHRMS) இவ்வாண்டு இறுதிக்குள்‌ (2019) செயல்படுத்தப்படும்‌ பொழுது விண்ணப்பம்‌ பெறப்படும்‌ அன்றே இறுதி ஒப்பளிப்பு ஆணைகள்‌ வழங்கப்படும்‌.

தேசிய ஓய்வூதியத்‌ திட்டம்‌ 01.01.2004-க்குப்‌ பிறகு பணியில்‌ சேர்ந்த அகில இந்திய பணி, இந்திய காவல்‌ பணி, இந்திய வனப்‌ பணி அலுவலர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு என்‌.எஸ்‌.டி.எல்‌ நிறுவனம்‌ மைய ஆவண வைப்பு நிறுவனமாக நியமனம்‌ செய்யப்பட்டதுடன்‌, ஒய்வதியநிதி ஒழுங்குமுறை மற்றும்‌ வளர்ச்சி ஆணையம்‌(PFRDA) அறக்கட்டளை வங்கியாகவும்‌, ஒய்வதிய நிதிமேலாளர்‌ மற்றும்‌ வருடாந்திர சேவை வழங்குவோராகவும்‌ தமிழக அரசினால்‌ 28.06.2017 அன்று ஒப்பந்தம்‌ செய்யப்பட்டுள்ளது. 

188 அகில இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்‌ பணி, இந்திய வனப்‌ பணி அலுவலர்களுக்கான சந்தா மற்றும்‌ அரசின்‌ பங்களிப்பு தொகையான ரூ.18.36 கோடிஎன்‌.எஸ்‌.டி.எல்‌-ற்கு இதுவரை மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரிலுள்ள இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களுக்கு தேசிய ஒய்வதியத்‌ திட்ட விழிப்புணர்வு முகாம்‌ நடத்தப்பட்டு CRA NSDL இணையதள முகப்பில்‌ உள்நுழைதல்‌, அவர்தம்‌ கடவுச்சொற்கள்‌ பராமரிப்பு, தேசிய ஒய்வதியத்திட்ட சந்தாதாரர்‌ வருடாந்திர கணக்குகளை பார்வையிடுதல்‌ மற்றும்‌ ePRAN கணக்குகளை பார்வையிடுதல்‌ குறித்து செயல்‌ விளக்கம்‌ அளிக்கப்பட்டது. இதனால்‌ இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்கள்‌ தேசிய ஒய்வூதிய திட்டத்தின்‌ குறித்து கூடுதல்‌ விவரங்களை தெரிந்து பயன்பெறலாம்‌ என கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்‌ துறை முதன்மைச்‌ செயலர்‌/ ஆணையர்‌, திரு.தென்காசி சு.ஐவஹர்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...