கோவை : கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், நாச்சிபாளையம் கிராமம், ஆதித்யா திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 242 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை : கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், நாச்சிபாளையம் கிராமம், ஆதித்யா திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 242 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை.எ.சண்முகம், வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) தனலிங்கம், கூட்டுறவு சங்ககளின் இணைப்பதிவாளர் பழனிச்சாமி, வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் உமாராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மேன்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை உயர் அலுவலர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களையும், கடைகோடி கிராமங்களிலுள்ள மக்களையும் இணைக்கும் பாலமாக மனுநீதி நாள் முகாம்கள் அமைகின்றன. அதன்படி, இன்று கோவை மதுக்கரை வட்டம், நாச்சிபாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அரசு செயல்படுத்தி வந்தாலும், மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில், தொலைதூர கிராமங்களில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது.
அதுபோலவே, மகளிர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித் திட்டம், முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டம், உழைக்கும் மகளிர்களுக்கு இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. மேலும், தமிழ்நாட்டில் மறத்துறைகளைக் காட்டிலும் கல்விக்கு அதிகளவிலான நிதியொதுக்கீடு செய்ததன் விளைவாக தமிழகத்தில் கல்விப்புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களையெல்லாம் அறிந்து அத்திட்டங்களைப் பெற்று உங்கள் வாழ்வில் வளம் காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் பேசினார்.
தொடர்ந்து, இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 93 பயனாளிகளுக்கு ரூ.11,16,000/- மதிப்பிலும், இலவச வீட்டுமனைப்பட்டா 35 பயனாளிகளுக்கு ரூ.17,95,680/- மதிப்பிலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.45,000/- மதிப்பிலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை 5 பயனாளிகளுக்கு ரூ.11,250/- மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் 4 பயனாளிகளுக்கு ரூ.14,2927/- மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சலவை இயந்திரம் 5 பயனாளிகளுக்கு ரூ.25,065,/-மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படும் விதைகள் மற்றும் நீர்பாசனக்கருவிகள் 5 பயனாளிகளுக்கு ரூ.1,41,177/- மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் 20 பயனாளிகளுக்கு ரூ.400/-மதிப்பிலும், நீர் தெளிப்பு பாசனக்கருவி 2 பயனாளிகளுக்கு ரூ.32,688/- மதிப்பிலும், 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அடையாள அட்டையும், மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக 66 பயனாளிகளுக்கு ரூ.1,63,10,700/- மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் 242 பயனாளிகளுக்கு ரூ.1,94,92,252/” மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.