கோவை : நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவடைந்த 38 வயது பெண் கூலித்தொழிலாளியின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கோவை : நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவடைந்த 38 வயது பெண் கூலித்தொழிலாளியின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பாதரை, சின்னான் காடு-ல் வசிக்கும் பழனிசாமி அவர்களின் மனைவி தங்கமணி (38). இவர் கடந்த அக் 15ம் தேதி மாலை 6.00 மணி அளவில் தனது வேலையை முடித்துவிட்டு விட்டுக்கு சாலை ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த சாலை வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 21ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் பழனிசாமி அவரது மனைவி தங்கமணி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது இருதய வால்வு, கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், கண்கள், தோல், எலும்பு மற்றும் ஒரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இருதய வால்வு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் ம..நல்லா ஜி பழனிச்சாமி அவர்கள் கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய தங்கமணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.