கோவை : தொடர் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, கோவை குற்றால அருவி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தொடர் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, கோவை குற்றால அருவி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல, நீர்நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, வெள்ளம் குறையும் வரை அருவியில் குளிக்க போளுவாம்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.