திருப்பூர் : திருப்பூரில் மனநல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் : திருப்பூரில் மனநல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூரில் தனியார் சமூக அமைப்புகள் சார்பில் மன நல விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாநகராட்சியிலிருந்து துவங்கியது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியில் மனநலத்தை பாதுகாப்பது குறித்தும் மன அமைதியுடன் இருப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், பேரணியின் முடிவில் மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.