கோவை : மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம், குடிநீர் திட்ட குழாய்கள் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே பரவலாக அனைத்து இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகள் என அனைத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதில் முக்கிய நீராதாரமாக விளங்கக்கூடிய ஏழு எறுமை பள்ளத்தில் நேற்று பெய்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடுமையான வெள்ளம் காரணமாக பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட குரும்பாபாளையம் கிராமத்தின் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, சுமார் 20 அடிக்கும் மேல் இரண்டாக துண்டிக்கப்பட்டு சேதமானது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த கிராமத்தில் இருந்து அன்னூர் சாலையை அடைய 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், இதே வெள்ளத்தில் சிக்கி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் ராட்சத குழாய்களும் அடித்து செல்லப்பட்டன. இதனால் திருப்பூர் மற்றும் அதன் வழியோர கிராம மக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.