கோவை : இந்துக்கடவுளை இழிவுபடுத்தி பேசியதாக கூறி தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை : இந்துக்கடவுளை இழிவுபடுத்தி பேசியதாக கூறி தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். சிறுமுகை கைத்தறியின் தந்தையாக கருதப்படும் இவர், தேசிய கைத்தறி பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காரப்பன், இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து இழிவான வகையில் பேசியுள்ளார். அது குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்,து இந்து முன்னணி சார்பில் காரப்பன் மீது தேசவிரோத சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய கோரி கடந்த வாரம் சிறுமுகை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.நந்தகுமார் தலைமையிலான அக்கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த புகார் மனுவில், எங்களது இந்து கடவுள்களான கிருஷ்ணன் மற்றும் அத்திவரதரை காரப்பன் என்பவர் மிகவும் இழிவாக பேசி உள்ளார். இவரது பேச்சுக்கள் இந்துக்களை கேவலப்படுத்தியதுடன் பல மனங்கள் புண்படும் படியும் உள்ளது. குறிப்பாக, இந்து பெண்களை இவரின் பேச்சுகள் மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆகவே காரப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.