கோவை : வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி அணைக்கட்டில் நீர் நிறைந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கோவை : வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி அணைக்கட்டில் நீர் நிறைந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இருந்தபோதும் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பாமல் இருந்து வந்தது.

இதனிடையே, தற்போது வடகிழக்கு துவங்கி தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து நிரம்பி வழியும் நீர் ஆர்ப்பரித்து ஆற்றில் வழிவதால், பேரூர் படித்துறை உட்பட நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் நீர்நிலைகள் நிரம்பு நிலை உருவாகியுள்ளது. இதனால் நொய்யல் ஆறு மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.