கோவை : மூன்று நாட்களுக்கு பின் துவங்கிய மலை ரயில் சேவை மண்சரிவு காரணமாக மீண்டும் ரத்து செய்யப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலைரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் பாறைகள் உருண்டு ரயில் பாதையில் விழுந்ததால் கடந்த அக்., 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் சீரமைப்புகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பிறகு இன்று காலை மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்டது.
இன்று காலை வழக்கம் போல் 7.15 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டுச் சென்றது. ரயில் கல்லாரினை தாண்டி சென்றபோது ஹில்கிரோ ரயில்நிலையம் அருகே மண்சரிவு ஏற்பட்டு, பாறை மற்றும் மண் விழுந்து ரயில் தண்டவாளங்கள் சேதமானது.
இதனையடுத்து, மலை ரயில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் கல்லார் ரயில்நிலையம் வரை ரயிலில் பயணிகள் அழைத்துவரப்பட்டு அரசு பேருந்து மூலம் உதகை அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக மலை ரயிலுக்காகக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.