திருப்பூர் : டெங்கு பாதிப்பு குறித்தும் டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து திருப்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை டெங்கு சிறப்பு கண்காணிப்பாளர் துவக்கிவைத்தார்.
திருப்பூர் : டெங்கு பாதிப்பு குறித்தும் டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து திருப்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை டெங்கு சிறப்பு கண்காணிப்பாளர் துவக்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கியது.

இதில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய காரணிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த உதவும் லார்வா வகை மீன்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில், பல்வேறு பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பறை இசையுடன் ஊர்வலத்தை துவங்கினர். இந்த ஊர்வலத்தை மாநில அரசால் நியமிக்கப்பட்ட டெங்கு காய்ச்சல் சிறப்பு கண்காணிப்பாளர் கோபால் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.