நீலகிரி : பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களிடம் பணம் புழக்கம் இல்லாததால் கடைகளில் வியாபாரம் இல்லை என்றும் பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்க்கும் சக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு மட்டுமே உள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதகையில் நடைபெற்றது. இந்த விழாவில், மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா இந்தாண்டு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது. கடந்த நூறாண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய பல போராட்டங்களின் விளைவாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் வகுப்புவாதம் இந்திய நாட்டின் வரலாற்றை பின்னுக்கு தள்ளக்கூடிய ஒரு பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் இதன் மூலம் பொருளாதார, சமூக கொள்கை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும், கம்யூனிஸ்ட் இயக்கம் ஜனநாயக இயக்கங்களை ஒன்றுபடுத்த முடியும் எனவும் முற்போக்கு இயக்கங்கள் தெற்கிலிருந்து வடக்கும் செல்லும் முயற்சி இந்த நூறாவது ஆண்டு விழாவில் கொண்டு வருவோம் என்றார்.
அதேபோல, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களிடம் பணம் புழக்கம் இல்லாததால் கடைகளில் வியாபாரம் இல்லை என்றும் இப்படிப்பட்ட பொருளாதார, சமூக நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகிறதுவதாக கூறினார்.
திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்த பணத்துக்கான வரவு செலவு கணக்கு, வருமான வரித்துறையிடம் உள்ளது. தேர்தல் கணக்குகள் தேர்தல் அதிகாரிகளிடம் உள்ளன. அதை மீறி எந்த பணமும் எங்களிடம் கிடையாது. நூறாண்டுகளாக இத்தகைய அவதூறுகளை தாண்டி தான் கம்யூனிஸ்ட் கட்சி வந்துள்ளது என்றார்.