கோவை : கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கோரி வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குரல் கொடுப்பேன் என கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்தார்.

சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய் கிடைத்த சான்றுகள் தான் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நகர நாகரீகம். தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதேபோல, இந்தச் சான்றுகள் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை ஓசூர் சாலையில் உள்ள ஆருத்ரா அரங்கில் நன்னெறி கழகத்தின் சார்பில் கீழடி ஒரு வரலாற்றுப் பார்வை என்ற கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வர பல்வேறு தளங்களில் செயல்பட்ட சு வெங்கடேசன் எம்.பி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கீழடியில் செய்யப்பட்டுள்ள ஆய்வு பெரிய உயிரினத்தின் வால் முனை மட்டுமே எனவும், அடுத்தடுத்த ஆய்வுகளில் தமிழ் வரலாற்றின் உடல், தலை, முகம் கிடைக்கும் எனவும் அதேபோல, இந்த அகழ்வாராய்ச்சிகள் தமிழ் சமூகம் எழுத்தறிவு கொண்ட சமூகம் என்பதை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

பின்னர் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து சிம்பிளிசிட்டி செய்தி குழுவினரிடம் சு வெங்கடேசன் பேசுகையில்;-
கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கீழடியை சங்ககால வாழ்விட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றார். மேலும், கீழடி அகழ்வாராய்ச்சியில் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், இதை முன்வைத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசுவோம் என்று கூறினார்.
அதேபோல, உத்தர பிரதேசம் சடவ்லி பகுதியை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது போல, கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க நாங்கள் வலியுறுத்துவோம் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில தொல்லியல் துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது வரவேற்புக்குரியது எனவும் மாநில தொல்லியல் துறை தொடர்ச்சியாக இந்த அகழாய்வை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.