மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் மோதி விபத்துள்ளானதில், பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றியதில் இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்

கோவை : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சையத். இவர் இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி சென்றார். அப்போது மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஜெ.ஜெ.நகர் பகுதியில் சென்ற போது மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சிமெண்ட் லாரி ஒன்று அன்னூர் நோக்கி எதிரே வந்தது. சையத் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில், மழை ஈரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதி விபத்துள்ளானது.

அதில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றியது. தீ மளமளவென பரவியதால் இருசக்கர வாகனமும், லாரியும் தீயில் கருகியது. இரு சக்கர வாகனத்தோடு சேர்த்து சையத்தும் உடல் கருகி உயிரிழந்தார். லாரி ஒட்டுநர் வெளியே லாரியில் இருந்து குதித்து ஒடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...