காவலர் வீர வணக்க நாள் – விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது கோவை காவல்துறை

கோவை : காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் இன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் இன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றி பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில் அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் அக்டோபர் 21ஆம் தேதி ஆண்டுதோறும் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

கோவையை பொறுத்தவரையில், கடந்த 1985 ஆம் ஆண்டு கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளால் குத்தப்பட்டு உயிரிழந்த காவலர், ராஜரத்தினம், 2011 ஆம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை பிடிக்க சென்றபோது அந்த லாரியால் உயிரிழந்த காவலர், சந்திரசேகரன், கோவை தொடர் குண்டுவெடிப்புக்கு முந்தைய ஆண்டான 1997 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த மூவரால் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதல்நிலை காவலர், செல்வராஜ் ஆகிய 3 காவலர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் கடந்த 5ஆம் தேதி தெருக்கூத்து நடத்தப்பட்டது. காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சுங்கம் வீதி சுந்தராபுரம் ஆகிய இடங்களில் இந்த தெருக்கூத்து நடத்தப்பட்டது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நடத்தப்படும் இந்த தெருக்கூத்தில் பறை இசை, நடனம் மூலம் நிகழ்த்தப்படுவது பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருந்தது. இந்நிலையில், காவலர்களின் பணி சூழல், சேவை குறித்து விளக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 



சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், போராட்டங்கள், பேரிடர் காலங்களில், பண்டிகை நாட்களில் கூட பணியாற்றும் காவலர்களின் உயர்ந்த சேவையை போற்றும் விதமாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...