நீலகிரி : கடந்த 2017ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த விஜயரத்தினம் என்ற குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் நீதிபதி முரளீதரன் தீர்ப்பளித்தார்

கூடலூர் அருகே ஓவேலி முல்லை நகர் என்ற பகுதியில் விஜயரத்தினம் என்ற சுரேஷ் (22) அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், குற்றவாளியை கூடலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்பு, இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 16ம் தேதியன்று ஆஜராக வேண்டிய குற்றவாளி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தப்பித்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியை காவல் துறையினர் கோவையில் கைது செய்தனர்.

இதனிடையே, உதகை மகளிர் நீதிமன்றத்தில் குற்றவாளியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளி தண்டனையை ஏக காலத்தில் முழுமையாக அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
மேலும், நீதிபதி உத்தரவின்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் தொகையை உடனடியாக வங்கி கணக்கில் மாவட்ட நிர்வாகம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.