கோவை : செட்டிப்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட மைலேரிபாளையம் பகுதியில், அரை சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மளிகைக்கடைக்கு தீவைத்து தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால்(60) தேவகி (55) தம்பதியினர், கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மைலேரிபாளையம் அருகே உள்ள தொப்பம்பாளையம் சாலையில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில், அதேகடையில் வசித்தும் வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன் மூதாட்டியின் கணவர் ஜெயபால் தனது சொந்த பணி நிமித்தம் திருவள்ளுவர் மாவட்டம் சென்றுள்ளார். இதனால் மூதாட்டி தேவகி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதையறிந்த மர்ம நபர்கள், மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். மேலும், தடயங்களை அழிக்க முயன்ற மர்மநபர்கள் சடலத்தை சுற்றியும் மிளகாய் பொடி தூவியதுடன் மளிகை கடைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் மளிகை கடையில் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, தேவகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் செட்டிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தேவகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்த போலீசார், நகைக்காக தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதும் இருக்கின்றதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.