கோவை : கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை துவக்கி வைக்க வந்த சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா, சிங்காநல்லூர் குளக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களிடம், மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் மற்றும் கோவை மாநகராட்சியில் capaCITES திட்டத்தின்கீழ் ஸ்விஸ் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு வந்த சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா அவர்களை, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
இந்நிகழ்வின்போது, இந்தியாவிற்கான ஸ்விஸ் தூதுவர் மேதகு.ஆண்ட்ரஸ்பாம், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அரச்சுணன், மாநகரப்பொறியாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.