பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு : பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து

கோவை : பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பரளிக்காடு நீர்த்தேக்க பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளனர்.

கோவை : பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பரளிக்காடு நீர்த்தேக்க பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது.



இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

வனத்துறையிடம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குடும்பத்துடன் கலந்துகொள்ளும் இந்த சூழல் சுற்றுலா வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்தப்படுகிறது. இச்சூழல் சுற்றுலாவானது பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் பயிற்சி பெற்ற பழங்குடியின மக்களுடன் பாதுகாப்பான பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, அடர்ந்த காட்டில் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் வட கிழக்கு பருவமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. நேற்று பில்லூர் அணை கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரியாக 30,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், அதிகப்படியான நீர் அணையில் தேங்கியதுடன் தற்போது 14,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் சூழல் சுற்றுலா நடைபெறும் இடமான பரளிக்காடு பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

 

எனவே, பரிசல்கள் இயக்க முடியாது என்பதாலும் சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் இந்த வாரம் நடைபெற இருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது இன்றும் நாளையும் இரு நாட்கள் நடைபெற இருந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக காரமடை வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...