கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்து பெண் அமைச்சர், துப்புரவு பெண் தொழிலாளர்கள் போட்டிருந்த கோலத்தை கண்டு அதிசயித்தார்.

சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா கலந்து கொண்டார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக போடப்பட்டிருந்த கோலங்களை பார்த்த அவர், இதனை போட்டது யார் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

கோலத்தைப் போட்டது துப்புரவு பெண் தொழிலாளர்கள் என அதிகாரிகள் கூறியதையடுத்து, அவர்களை நேரில் பார்க்க அமைச்சர் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த தொழிலாளர்களிடம் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், கோலம் போடுவது குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து, அவர்களிடம் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் துப்புரவு பெண் தொழிலாளர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.