கோவை : கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதனை சாலையோர மின்விளக்குகளுக்குப் பயன்படுத்தும் திட்டத்தை சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து, அப்பகுதியில் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கேடுகள் விளைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த வார்டுகளிலேயே மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரங்கள் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள பாரதி பார்க் பகுதியில் மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை மாநகராட்சி அமைத்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டு நிதியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை இன்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா பார்வையிட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, அந்நாட்டு அதிகாரிகள், கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 2500 வீடுகளில் நாளொன்றுக்கு சேகரிக்கப்படும் 1500 கிலோ மக்கும் குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு, இயந்திரங்கள் மூலம் மீத்தேன் வாயுவாக மாற்றப்படும். பின்னர், மீத்தேன் வாயுவைக் கொண்டு ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 250 தெருவோர மின்விளக்குகள் ஒளிரூட்டப்படுகிறது.
45 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் 60 முதல் 90 கிலோ சமையல் எரிவாயு, 300 கிலோ இயற்கை உரம் உள்ளிட்டவற்றுடன், சுமார் 150 முதல் 170 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரமே இந்த இயந்திரங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பதால் கூடுதல் மின்சார தேவை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 6 முதல் 8 மணி நேரம் வரை இந்த மின்சாரம் மூலமாக தெருவிளக்குகள் எரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.