கோவை : கோவை மாவட்டம், கூடலூர் பேரூராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, அவர்கள் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
வேளாண்மை தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும். உணவுப்பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும், வேளாண் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். அதனடிப்படையில் வேளாண்மைத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.
கோவை மாவட்டத்தில், விவசாயிகள் நீர் சேமிப்பு செய்திட சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன கருவிகள் அமைக்கும் பணிகளில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன திட்டத்தின் மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம், ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், சூரிய ஒளி மின்மோட்டார் அமைக்கும் திட்டம், மீன் பண்ணைக் குட்டை அமைத்தல் செயற்கை முறை செறிவூட்டல் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், கோவை மாவட்டம் கூடலூர் பேரூராட்சி தெற்கு பாளையத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.72,465,/- மானியமாக பெற்ற வேலுச்சாமி என்பவரின் தோட்டத்தில் 1.80 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு சொட்டுநீர் பாசனம் முறையில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளதையும், தேவயாம்பாளையத்தில், பத்மநாபன் அவர்கள், தரிசாக இருந்த தனது நிலத்தில் ரூ.5.25இலட்சம் மானியத்தில் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டார் அமைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்யும் வயலையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் திரு.பழனிச்சாமி என்பவர் வீரிய வெண்டை சாகுபடி செய்யப்பட்ட தோட்டத்தில் வெண்டைச் செடிகளின் வளர்ச்சியையும், செடியின் தரத்தையும் பார்வையிடப்பட்டது. மேலும், திருமலைநாயக்கன் பாளையத்தில், வேளாண்மைத்துறை
விதை பண்ணைத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சோள விதைப் பண்ணை மூலம் விதை உற்பத்தி செய்யும் பண்ணை வயல்களை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழு தாக்குதல் ஏற்படும் விவசாயிகளின் வயல்களில் மெட்ரோரைசியம் மருந்து தெளிப்பதற்கும், அதற்காக மருந்துகள் நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி பெற்று மாவட்ட வேளாண் இடுபொருள் கொள்முதல் குழு மூலமாக கொள்முதல் செய்து மக்காச்சோள வயல்களில் தெளிக்கவும் ஆணை வழங்கியதன் பொருட்டு கோவை மாவட்டத்தில் 318 ஏக்கர் பரப்பில் ரூ.15.05 லட்சம் மதிப்பில் செயல்படுத்திடவும், அதன் தொடக்கமாக குருடம்பாளையம், கிராமத்தில், மக்காச்சோள படைப்புழுவினை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த மருந்து தெளித்ததின் கீழ் மெட்ரோரைசியம் மருந்து தெளிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை விவசாயிகள் அறிந்துகொண்டு அதன்மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாட்டு குழுவின் மூலம் பனை விதைகள் நடவுப்பணியினை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, அவர்கள் தொடங்கி வைத்தார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது, வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( வேளாண்மை) சிவசுப்பிரமணியன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் உமாராணி, வேளாண்மை துணை இயக்குநர் டாம்பி.சைலஸ், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.