நீலகிரியில் இரவு பகலாக தொடரும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி : நீலகிரியில் வடகிழக்கு பருவமழை இரவு பகலாக பெய்து வருவதால், உதகையில் இருந்து மஞ்சூர் வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால் புறநகர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் 16ம் தேதி முதல் இரவு பகலாக வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் நல்ல வெயிலும் இரவு முழுவதும் இடியுடன் கனமழை கொட்டித் தீர்ப்பதால் நேற்றும், இன்றும் உதகையில் இருந்து மஞ்சூர் கின்னகொரை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பாேக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கின்னகொரை கிராமத்திற்குச் செல்லும் சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஞ்சூர், குந்தா, குந்தா பாலம் போன்ற பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு உள்ளது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு மின் உற்பத்திக்குப் பயன்படுத்தும் அப்பர் பவானி, குந்தா, அவலாஞ்சி போன்ற அணைகள் திறக்கப்பட்டுள்ளதால், கிராமங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட பகுதி சீர் செய்யப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு வருவதால் உதகை - மஞ்சூர் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.