புரட்டாசி முடிவடைந்ததை அடுத்து களைகட்டிய அன்னூர் ஆட்டு சந்தை - ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

கோவை : புரட்டாசி மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் களைக்கட்டிய அன்னூர் ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்ததால் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.

கோவை : புரட்டாசி மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் களைக்கட்டிய அன்னூர் ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்ததால் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.

 கோவை மாவட்டம் அன்னூர் பகுதி அதிக அளவில் கிராமங்களையும் விவசாய நிலங்களையும் கொண்ட பகுதி. இங்கு கால்நடை வளர்ப்பு என்பது அதிக அளவில் இருந்து வருகிறது.

வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பு மற்றும் நாட்டு கோழிகள் என்பது இந்த பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால் அவைகளைச் சந்தைப்படுத்தும் ஆட்டு சந்தை வாரந்தோறும் அன்னூரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை பெரும்பாலான மக்கள் தவிர்த்து வந்தனர். இதனால் புரட்டாசி மாதம் துவங்கிய முதல் ஆட்டு சந்தையில் இருந்து வியாபாரம் மந்தமாக இருந்து வந்தது. 

இதனால் கால்நடைகள் வியாபாரம் இன்றி அன்னூர் சந்தை காணப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐப்பசி மாதம் பிறந்தவுடன் அன்னூர் ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் ஒரு மாதத்திற்குப் பின்னர் குவிந்துள்ளதால் அன்னூர் ஆட்டு சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே கூடிய இந்த ஆட்டுச் சந்தைக்கு தமிழகத்தின் அன்னூர், புளியம்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. 

தலையில் அதீத முறுக்கு கொண்ட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது. ஐந்தாயிரம் ரூபாயில் துவங்கி அதிகபட்சமாக 20,000 வரை ஒரு ஆடு விலை நிர்ணயம் செய்து விற்பனையானது. இந்த சந்தையில் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.

ஒரு மாத இடைவேளைக்குப் பின் இன்று கூடிய ஆட்டு சந்தையில் ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...