அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக புகார் : தமிழக அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமக்கும் சூழ்ச்சியை தமிழக அரசு மேற்கொள்வதாகவும், மத்திய அரசின் முயற்சிக்கு மாநில அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமக்கும் சூழ்ச்சியை தமிழக அரசு மேற்கொள்வதாகவும், மத்திய அரசின் முயற்சிக்கு மாநில அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போதுள்ள பேருந்து வழித்தடங்களை படிப்படியாக தனியார் மயமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 525 மின்சார பேருந்துகளை சென்னை, அரசு விரைவு தவிர மற்ற அனைத்து கழகங்ளின் வழித்தடங்களில் அரசு இயக்குகிறது. இந்த மின்சார பேருந்துகள் காண்ட்ராக்ட் முறையில் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

2000 புதிய பேருந்துகள் இதே அடிப்படையில் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது, ஊழியர் நலனுக்கு எதிரானது எனக்கூறி தமிழக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கக்கூடாது, மின்சாரப்பேருந்து என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் மத்திய அரசின் சதிக்கு துணைபோக கூடாது, சேவைத்துறையான போக்குவரத்து துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேட்டுபாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, எம்எல்எப், எச்எம்எஸ், ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...