கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக தூய்மை பணி

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின் பேரில், சுகாதாரமற்ற நிலையில் உள்ள இடங்களை, துப்புரவு தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக சுத்தம் செய்தனர்.


கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின் பேரில், சுகாதாரமற்ற நிலையில் உள்ள இடங்களை, துப்புரவு தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக சுத்தம் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, சுகாதார சீர்கெடு, துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழிவு நீர் தொட்டி ஒன்று திறந்து அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. மேலும், அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் ஏராளமான கொசு புழுக்கள் இருந்தன. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே போல், நடைபாதையின் அருகில் ஒரு எலி இறந்து கிடந்தது. இது மக்களால் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ஆட்சியர் ராசாமணியின் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமற்ற நிலையில் உள்ள பகுதிகளை துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு தூய்மை பணியில் நேற்று ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தூய்மை பனியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...