5 வயது மகள் மர்ம மரணம் : தூக்கில் தொங்கியபடி பெண் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

கோவை : கோவையில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணும், 5 வயது மகளும் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : கோவையில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணும், 5 வயது மகளும் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரில் வேதவள்ளி (41) என்பவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வந்துள்ளார். வேதவள்ளியின் கணவர் கண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தபோது இறந்துள்ளார். வேதவள்ளி தனது கணவர் இறந்ததையடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன், கோவையில் தனது பெற்றோர், தம்பியுடன் வந்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வேதவள்ளியின் 5 வயது மகள் கார்குழலிக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் மற்றும் சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, வீடு பூட்டப்பட்டு, வீட்டில் தனியாக இருந்த வேதவள்ளி தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.

வேதவள்ளியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேதவள்ளியின் மரணமும், குழந்தையின் மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, வேதவள்ளி தனது 5 வயது மகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...