கோவை : பாரதியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள காளிராஜ் இன்று முறைப்படி பல்கலைக்கழக அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தமைக்கு ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான இதில் சிறந்த கட்டமைப்பு, சிறந்த பேராசிரியர்கள் உள்ளதாகவும் இப்பல்கலைக்கழகத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மேம்படுத்தும் முயற்சியில் தம்முடன் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கு தகுதியான மாணவர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகம் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறிய அவர், பட்டப்படிப்புடன் சேர்த்து வேலை வாய்ப்புக்கான சான்றிதழ் படிப்புகளையும் வழங்க வேண்டும் என கூறினார். பல்கலைக்கழகத்தில் கூட்டு முயற்சியின் காரணமாக பல்கலைக்கழகத்தையும், மாணவர்களையும் சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனக்கூறிய அவர், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

மேலும், தனியார் கல்லூரிகள் கல்வியை ஒரு சேவை என கருதி மாணவர்களின் நலனுக்காக பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் இருக்குமேயானால் அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.
துணைவேந்தருக்கு கீழ் உள்ள முக்கிய பொறுப்புகளுக்குத் தரம் வாய்ந்தவர்களை கொண்டு தேர்வுக்குழு அமைத்து வெளிப்படைத் தன்மையோடு பொறுப்புகள் நியமிக்கப்படும் எனக்கூறிய அவர், தரவுகளை சரியாக பயன்படுத்தினால் பல்கலைக்கழகத்தின் தரம் முன்னேறிச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.
கடந்தகால நிர்வாக ரீதியான குளறுபடிகளை ஆய்வு செய்து, அதனை கூடிய விரைவில் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்த அவர், வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யப்படும் என்று கூறினார்.