கோவை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு மருத்துவர்கள், கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு மருத்துத்துவர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள விரிவுரை கூடத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த அரசு மருத்துவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பின் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.