நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்படையும் இடங்களில் மீட்புப்பணிகளை துரிதமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் அதிகமாக நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை ஆகிய இடங்களில் பெய்துள்ளது. இந்த நிலையில், மழையால் பாதிப்படையும் இடங்களில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
மேலும், தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால், சுமார் இருநூற்று எண்பதுக்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் அவர்கள் பகுதியில் உள்ள பாதுகாப்பான முகாம்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மீட்புப் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் என அனைத்துத் துறையினரும் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் இன்று மழையின் அளவு அதிகமாக காணப்பட்டால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.