நீலகிரி : நீலகிரி மாவட்டம் குந்தா அருகே இரவு முழுதும் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள மெர்லாேண்ட், கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனைச் சீர்செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதிகாலை 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக, அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனை உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை மெர்லாேண்ட் அருகே ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கெத்தை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து இரவு நேரத்தில் மழை பெய்ததால் சாலைகளில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.