கோவை : சாலையின் ஓரங்களில் ஆதரவற்று கிடக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களை சுத்தப்படுத்தி மீட்கும் தன்னிகரில்லா சேவைப்பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், கோவையில் இன்று தங்களது சேவையை மேற்கொண்டனர்.

சாலையில் அமர்ந்திருக்கும் நபர் கேட்கிறாரோ இல்லையோ, போகிற போக்கில் காசு ஒன்றை சுண்டி விட்டு செல்வதே பெரிய மனிதாபிமானம் என்கிற நிலை உருவாகிவிட்டிருக்கிறது. கடந்து செல்லும் எல்லா மனிதர்களையும் நினைவில் கொள்ள முடியாது என்றாலும், கடந்து செல்லும் பாதையில் நீக்கமற அமர்ந்திருக்கிற இவர்களை என்றாவது ஏன் இப்படி அமர்ந்திருக்கிறீர்கள் என கேட்க வேண்டும் என்கிற எண்ணம் கூட பலருக்கு தோன்றுவதில்லை.
அமர்ந்திருக்கும் கோலத்திலேயே இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றுத்திறனாளியாக இருக்கலாம் என்கிற எண்ணத்தில் கடந்து விடுகிறோமே தவிர அவருக்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா என எப்போதும் நாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
இந்த நிலையில், அப்படிப்பட்டவர்களை அரவணைத்து, அவர்களை சுத்தப்படுத்தி, புத்தாடைகள் கொடுத்து தேவைப்பட்டால் அவர்களது இல்லத்திலேயோ அல்லது மறுவாழ்வு மையங்களிலேயோ சேர்த்துவிடுகிற மனிதநேய பணியை செய்து வருகிறார்கள் திருநெல்வேலியை சேர்ந்த பசியில்லா தமிழகம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜின்னாவும், சரவணனும். 100 நாட்கள், 15 மாநகராட்சிகள் என்ற பெயரில் தமிழகம், புதுச்சேரியின் பல இடங்களுக்கும் சென்று சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேற்சொன்ன சேவைகளை செய்து வருகிறது இக்குழு.
கடந்த செப்டம்பர் 9ம் தேதி திருநெல்வேலியில் துவங்கிய இந்த குழு, இன்று கோவையில் தங்களது சேவைகளை மேற்கொண்டனர்.

சரவணனுடன் பேசிய போது, சாலையோரம் இருக்கும் எல்லோருமே மனநலம் பாதித்தவர்கள் அல்ல எனவும் அவர்களின் கிழிந்த கந்தலான துர்நாற்றம் வீசும் உடைகள் காரணமாக யாரும் அவர்களை சீண்டுவதில்லை எனவும் அவ்வாறு இருப்பவர்கள் பலரை குளிக்க வைத்து, சவரம் செய்து, புத்தாடை அணிவிக்கும் போது அவர்களா இவர்கள் என ஆச்சரியம் மேலிடம் என தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக கூறும் சரவணன், இந்த பணிகளுக்குப் பிறகு உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் அவர்களை சொந்த வீடுகளிலோ அல்லது மறுவாழ்வு மையங்களிலோ சேர்த்துவிடுவது மனதிற்கு நிறைவை தருவதாக குறிப்பிடுகிறார். இவர்களுடன் பயணிக்கும் நிசார் மற்றும் ஜாபர், அழுக்கான உடையுடன் அருகில் வந்தால் தள்ளிப்போகும் நம் போன்றவர்களை போல் இல்லாமல், சக மனிதன் என்ற எண்ணத்துடன் சகஜமாக தொட்டு சுத்தப்படுத்துகின்றனர் என்பது சிறப்பு.

இவர்களது சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை சோறு அல்லது ஒரு சில்லரை காசு மட்டுமே மனிதாபிமானம் அல்ல என சொல்லாமல் சொல்லிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திச் செல்கிறது இந்த இளைஞர் குழு.