கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளம் அருகே உள்ள பெரிய நகர் பகுதியைச் சேர்ந்த பாபுவின் மகள் தீபிகா (10). இவர் மருதூர் மாநகராட்சி துவக்க பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இப்படியிருக்க சிகிச்சைக்காக கடந்த 16 ஆம் தேதி உறவினர்களால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை சுமார் 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் காய்ச்சல் பாதிப்பினால் மாணவி உயிரிழந்ததையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் சிறுமியின் வீட்டருகே மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்ததாக சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.