கோவை : கோவை மாவட்டம் குமிட்டிபதி பகுதியில் கனமழை காரணமாக தரைப்பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாவட்டம் குமிட்டிபதி பகுதியில் கனமழை காரணமாக தரைப்பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை அருகேயுள்ள குமிட்டிபதி பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது.

இதனால், மஞ்சள் பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், குமிட்டிபதி - க.க.சாவடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குமிட்டிபதி, குட்டிகவுண்டபதி, மாரிசெட்டிபதி, க.க.சாவடி, பிச்சனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பல கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.
இதனையடுத்து, சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.