ஆனைகட்டியில் மாசு இல்லாத பசுமை தீபாவளி கொண்டாடிய பழங்குடியின குழந்தைகள்

கோவை : ஆனைகட்டி மலைகளில் உள்ள பனப்பள்ளி தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குழந்தைகள் கடந்த புதன்கிழமை மாசு இல்லாத பசுமை தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை : ஆனைகட்டி மலைகளில் உள்ள பனப்பள்ளி தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குழந்தைகள் கடந்த புதன்கிழமை மாசு இல்லாத பசுமை தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செசா(CESA) ஸ்டுடியோ, சோஷியல் கிளப் - ஈகாய் மற்றும் ஈகோ கிரீன் கிளப், கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறையின் மண்வாசம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், பழங்குடி குழந்தைகள் வேடிக்கையான விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில், வனவிலங்குகளால் அதிகமாக காணப்படும் ஆனைகட்டி போன்ற மலைப்பிரதேசங்களில், பட்டாசுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் மோசமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.



கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு அமைக்கப்பட்ட செல்ஃபி அரங்கம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. அதில், குழந்தைகள் புகைப்படம் எடுப்பதையும், பிரேம் ஸ்ட்ரக்சர் போன்ற ஒரு காருக்குள் இருந்து செல்பி எடுப்பதையும் மிகவும் ரசித்தனர். இதுகுறித்து அமைப்பாளர்களில் ஒருவரான பிருத்வி பேசுகையில், நகரத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்களிலும், பொதுக்கூட்டங்களிலும் இவை கிடைக்கின்றன, அதேசமயம், இங்கு வசிக்கும் மக்களுக்கு நகரத்தின், இதுபோன்ற பொதுவான நிகழ்வுகளை அனுபவிக்கும் ஆடம்பரங்கள் கிடைப்பதில்லை என்று கூறினார்.

மேலும், குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் மற்றும் அதை மாசுபடுத்தும் காரணிகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்துவதும் முக்கியம் என்று கூறிய அவர், இந்த மக்கள் புதிய காற்று, சுத்தமான நீர் மற்றும் பசுமையான இயற்கையின் அழகை அனுபவித்து வருவதாகவும், அவர்கள் வளர்க்கும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க, அவர்கள் பாதுகாவலர்களாக வளர வேண்டியது அவசியம் என்றார்.



பின்னர், மரங்கள், நீர், பள்ளிகளில் குப்பை கொட்டக் கூடாது மற்றும் மாசுபாடு குறைந்த காற்றின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வின் முடிவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 



இறுதியாக உள்ளூர் மக்கள் நிகழ்த்திய பழங்குடி நடனத்துடன் இந்த நிகழ்வு முடிவடைந்தது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...