கோவை : கோவையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டபட்ட சாலைகள் சரிவர மூடாமலும் சாலையில் பயணிக்கு பொதுமக்கள் கடும் அவதி பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவானந்தபுரம் பகுதியில் சாலை சரிவர இல்லாததால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும், இன்று காலை கூட அவ்வழியே வந்த முதியவர்களான கணவன் மனைவி இருவரும் தேங்கிய தண்ணீரால் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சாலை அமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேங்கிய மழை நீரில் காகித கப்பல் விடும் நூதன போராட்டத்தில் இன்று மாலை ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் தரமான சாலை அமைத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கோவை கணபதி அடுத்த சிவானந்தபுரம் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மூன்றாவது வீதியில் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு சாலை அமைக்கபடவில்லை எனவும் மின்வாரிய அலுவலகம் மற்றும் தபால் அலுவலகம் இப்பகுதியில் தான் அமைந்துள்ளது எனவும், அடிப்படை வசதியான சாலை சரிவர இல்லாததால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அல்லோலப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.