இலங்கை அகதிகளுக்கு போலியான பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்த விவகாரம்; கைது செய்யப்பட்டவரை வரும் 20ஆம் தேதி வரை கோவை போலீசார் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த வழக்கில் கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை க்யூ பிரிவு போலீசார் மூன்றுநாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.

கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த வழக்கில் கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை க்யூ பிரிவு போலீசார் மூன்றுநாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.

இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் தமிழகத்தில் மொத்தம் 119 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.

இப்படியிருக்க, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, போளூவம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகள் முகாம் உள்ளன.

இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

இப்படியிருக்க மதுரை, திருச்சியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போட் வாங்கிய நபர்கள் சிலரை கியு பிரிவு

போலீசார் கைது செய்தனர்.

இதனை, தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மற்றும் ஏஜென்ஸிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் கோவை கணபதியைச் சேர்ந்த ரகுபதி என்பவரை கியூ பிரிவு போலிசார் கடந்த மூன்றாம் தேதி கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 6 பேருக்கு பாஸ்போர்ட் பெற்று கொடுத்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ரகுபதியை கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலிசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பின்னர், ரகுபதி கொடுத்த தகவலின் பேரில் கோவையைச் சேர்ந்த திலீபன் என்பவரை அடுத்த நாளே போலீசார் கைது செய்தனர்.

அதேபோல புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஆனந்தன் என்பவரையும் புதுக்கோட்டை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், ஆனந்தனை கோவை கியூ பிரிவு போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நீதிபதி வரும் 20ம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...