கோவை : கோவையில் பாரதி பூங்காவிற்கு அருகில் வரும் அக்டோபர் 19ம் தேதி பயோகாஸ் வசதியை சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் சிமோனெட்டா சோமருகா திறந்து வைக்கிறார்.

மொத்தம் 1.5 டன் கொள்ளளவு கொண்ட இந்த பயோகாஸ் கலன், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கரிம கழிவுகளை கொண்டு மின் சக்தியாக மாற்றுகிறது.
அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்.டி.சி) நிதியுதவி அளிக்கும் இந்த ஆலை, கேபாசிட்டிஸ் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆலையில் ஒரு நாளைக்கு 150 கிலோ வாட் வரை மின்சாரம் தயாரிக்க முடியும்.
கோவை மாவட்டத்தை போலவே, அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்.டி.சி) நாடு முழுவதும் ராஜ்கோட், சிலிகுரி மற்றும் உதய்பூரில் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு திட்டங்களைத் தொடங்குகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடன் நட்பை தொடர்ந்து வரும் எஸ்.டி.சி, கடந்த 2011 முதல் குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகிறது. குறைந்த கார்பன் மற்றும் காலநிலை நெகிழ் திறன், நகர மேம்பாட்டுக்கான திறன் மேம்பாடு (CapaCITIES) என்பது எஸ்.டி.சி யின் திட்டமாகும்.