வீரமரணமடைந்த காவலர்களை நினைவுகூரும் விதமாக வீரவணக்கம் நிகழ்ச்சி

கோவை : பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவை சுங்கம் அருகே உள்ள அம்புரோஸ் கல்லூரியில் நடைபெற்றது.

கோவை : பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவை சுங்கம் அருகே உள்ள அம்புரோஸ் கல்லூரியில் நடைபெற்றது.

காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்கம் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், சுங்கம் அருகே உள்ள அம்புரோஸ் கல்லூரியில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மறைந்த காவலர்களை நினைவுகூரும் விதமாக மாணவர்கள் நடனம், ஊமை நாடகம் உள்ளிட்டவற்றை நடத்தினர்.

ராமநாதபுரம் காவல் நிலைய நுண்ணறிவு துறையின் அதிகாரி ஆனந்த், காவலர்கள் நல்லமுத்து, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா, வீரமரணமடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல் பற்றி உரையாடினார். அதேபோல, மாணவச் செல்வங்கள் வருங்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...