கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திலுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனிருந்தார்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 21-வது வார்டுக்குட்பட்ட ஜி.சி.டி கல்லூரி குடியிருப்பு பகுதிகளிலும், 17-வது வார்டுக்குட்பட்ட பொம்மணாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அடபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்களால் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மேற்கு மண்டலம், 7, 8-வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகா், கோல்டன் நகர், கண்ணபிரான் நகர் ஆகிய பகுதியிலுள்ள வீடுகளின் மாடிகளில் மழைநீர் தேங்காத வகையில் வைக்கவும், வீடுகளிலுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில்அரசன் அவர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.