நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் ; பிரபல மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம்

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச்சில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச்சில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளையே அவர்களுக்கு வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.



இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் சித்ரா பகுதியில் இயங்கி வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்த போது உணவை மாற்றிக்கொடுப்பதாகவும் இப்பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இது தொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவமனை உணவக தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வேளாண் உணவுப் பொருட்களான தக்காளியில் புழுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு நல அலுவலர் தமிழ்செல்வன், ஆய்வின் அடிப்படையில் இனிமேல் உணவு தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என மருத்துவமனை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். மீண்டும் இது போன்ற புகார்கள் வந்தால் அதன் பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு பணம் முக்கியம் என்றாலும் உணவிலும் பணம் பார்க்க, தரத்தை கைவிட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தை நோயாளிகளிடம் ஏற்படுத்தியிருக்கும் இது மாதிரியான சம்பவம், இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...