கோவையில் 'இயற்கை சீற்றம் மற்றும் உயிர்வாழ்வு' குறித்த இரண்டு நாள் புகைப்பட கண்காட்சி

கோவை : கோவையில் இயங்கி வரும் கேரளா கல்சுரல் அறக்கட்டளை மற்றும் திருச்சூர் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து 'இயற்கை சீற்றம் மற்றும் உயிர்வாழ்வு' புகைப்பட கண்காட்சியை கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை அரங்கில் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடத்துகிறது.

கோவை : கோவையில் இயங்கி வரும் கேரளா கல்சுரல் அறக்கட்டளை மற்றும் திருச்சூர் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து 'இயற்கை சீற்றம் மற்றும் உயிர்வாழ்வு' புகைப்பட கண்காட்சியை கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை அரங்கில் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடத்துகிறது.



இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. அப்போது, கேரள கல்சுரல் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் விசாகன் பேசுகையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், தங்களது உடைமைகளை இழந்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டதாகவும் அவர்களுக்கு பல தரப்பட்ட மக்கள் உதவிக்கரம் நீட்டியதாக கூறிய அவர், இந்த மழையால் ஏற்பட்ட சேதங்களை பத்திரிகையாளர்கள் எடுத்து அரிய புகைபடங்களை கண்காட்சியில் வைக்கப்பட உள்ளத்காக தெரிவித்தார்.

மேலும், இந்த கண்காட்சி இயற்கை பேரழிவின் தாக்கத்தை மக்கள் எதிர் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தும் விதமாக அமையும் என தெரிவித்தார். இந்த கண்காட்சியை நாளை மற்றும் நாளைய மறுதினம் நடக்க உள்ளதாகவும், கேரள புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்ட 110 அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் 5,000 மேற்பட்டோர் கண்காட்சியை காண வருவார்கள் என எதிர்பார்பதகாக தெரிவித்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மும்பை மற்றும் கொல்கத்தாவில் கண்காட்சி நடைபெற்றதாகவும் இந்த கண்காட்சியை கோவை 105 அதிவிரைவு படை கமாண்டர் ஜெயகிருஷ்ணன் துவக்கி வைக்க உள்ளதாகவும் கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்களுக்கு சிறந்த caption எழுதும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேரளா கல்சுரல் டிரஸ்ட் துணை தலைவர் மோகன் குமார், இணை செயலாளர் மனோஜ் மற்றும் கலை பிரிவு செயலாளர் ஜோட்டி குமார் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...