வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க காவல்துறை சார்பில் நில வேம்பு கசாயம்

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் நிலையில் அதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை காவல்துறை அரசு மருத்துவமனை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் நிலையில் அதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை காவல்துறை அரசு மருத்துவமனை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து மழை மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறை பகுதியில் டெங்கு காய்ச்சல் வருவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை காவல்துறை அரசு மருத்துவமனை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், நில வேம்பு கசாயத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கினார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நில வேம்பு கசாயத்தை வாங்கி பருகினர்.

இந்த நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் வீரம்மாள், அரசு மருத்துவமனை யோகா மருத்துவர் கார்த்திகேக்ஷ், சித்தா மருந்தாளுநர் பாபு, காவல்துறையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...