உதகை மஞ்சூர் சாலையில் கனமழை காரணமாக மண் சரிவு ; போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி : உதகை மஞ்சூர் சாலையில் மேரிலேண்ட் அருகே கனமழை காரணமாக மிகப்பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : உதகை மஞ்சூர் சாலையில் மேரிலேண்ட் அருகே கனமழை காரணமாக மிகப்பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது. பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் வானிலையில் அவ்வப்போது, பகல் நேரங்களிலும் மழை பெய்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள குந்தா பாலம் அருகே கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்தன.



மஞ்சூர் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மஞ்சூரில் இருந்து உதகை வரும் போக்குவரத்துகளும், உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் போக்குவரத்தும் தடைபட்டது.



கனமழையால் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையினர், ஜேசிபி மூலம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மஞ்சூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டால் சீர்செய்ய தயார் நிலையில் ஜேசிபி எந்திரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...