கோவை : கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வால்பாறை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய முருகேசன் விருப்ப மாறுதலில் பணி மாறுதல் பெற்று கோவை நகரத்திற்கு சென்று விட்டார். இதையடுத்து, வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் பாலமுருகன் பணி மாறுதல் பெற்று வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவரை உதவி ஆய்வாளர் வீரம்மாள், சிறப்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.