கோவை : சிறுதுளி அமைப்பின் சார்பில் கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் “விடுதலை பசுமை பயணம்” எனும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

கோவையின் நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிக்கும் பணியை சிறுதுளி அமைப்பு கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றது. கோவையின் சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்தும் பொருட்டு சிறுதுளி அமைப்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றது. இதன் தொடர் முயற்சியாக கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் “விடுதலை பசுமை பயணம்” எனும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி இணை ஆணையாளர் பிரசன்னா குமாரசாமி, கோவை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், நல்லறம் டிரஸ்டின் தலைவர் எஸ்.பி.அன்பரசன், பேக்கர் ஹ்யூக்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய தலைமை செயல் அதிகாரி ஆஷிஸ் பண்டாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறுதுளி அமைப்பின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் வரவேற்புரையில், ”தொழிற்சாலை, வாகனங்கள் உள்ளிட்ட புகையினால் ஏற்படும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த ஒரே வழி அதிக மரங்களை நட்டு பராமரிப்பது தான். காற்று மாசுபாட்டினை குறைப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுவரை கோவையின் 14 குட்டைகளைத் தூர்வாரி பராமரித்துள்ளோம். மற்றும் கோவையில் இதுவரை 6 லட்சம் மரங்களை நட்டு உள்ளது சிறுதுளி. எங்களது முக்கியமான குறிக்கோள் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாநகரில் 15 லட்சம் மரங்களை நடவேண்டும் என்பதே என்றார்.
மேலும், பேக்கர்ஸ் ஹ்யூக்ஸ் போன்ற நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் தருவது வரவேற்கப்பட வேண்டியது. எங்களது முயற்சிக்கு ஒத்துழைத்த சிறைத்துறைக்கு நன்றிகள். இரண்டு வருடங்கள் முன் சிறைச்சாலை வளாகத்தில் சிறுதுளி நட்ட 5,000 மரங்கள் செழித்து வளர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேசினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி பேசுகையில், “உலக வெப்ப மயமாதல், காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவற்றை சந்தித்து வரும் நிலையில், இதனை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிறுதுளி போன்ற அமைப்புகள் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களின் வேகத்துக்கு அரசும் இணைந்து செயலாற்றவே விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், அரசு சார்பில் மக்களிடையே நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பது, மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையும் கோவையின் பல்வேறு நீராதாரங்களில் அதிகளவு நீர் தேக்கும் முயற்சியில் குளங்களை தூர்வாரி, மேம்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்று பேசினார்.
ஆஷிஸ் பண்டாரி பேசுகையில், டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவுகிறது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதும் முகத்தில் மாஸ்க் அணிந்தே வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலை கோவையில் இல்லை. எதிர்காலத்தில் இது போன்ற சூழலை எதிர்கொள்ளாமல் இருக்க மரங்களை நட வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுதுளியின் உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.